நமது ஆரோக்யா மருத்துவமனை மற்றும் , இன்னர் வீல்ஸ் கிளப் ஆப் ராம்நாட் இணைந்து நடத்திய தைப்பொங்கல் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஆரோக்யா பாராமெடிகள் இன்ஸ்டிடியூட் மாணவர்களின் நடன நிகழ்ச்சி , பாட்டு நிகழ்ச்சிகள், விழாவில் கலந்துகொண்ட அனைவரது மனங்களுக்கு இனிப்பாய் அமைந்தது . இன்னர் வீல்ஸ் கிளப் சார்பாக கலந்துகொண்ட அனைவரும் விழாவை இரசித்ததுடன் , நடைபெற்ற போட்டிகளிலும் பங்கேற்று பரிசுகள் பெற்றனர் . நமது ஆரோக்யா மருத்துவமனை முதன்மைச் செயல் அலுவலர் Dr . வித்யா பிரியதர்ஷினி நன்றியுரை வழங்க , விழா இனிதே நிறைவுற்றது.