தேசிய ஊட்டச்சத்து வாரம் என்பது இந்தியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 1 முதல் 7 வரை அனுசரிக்கப்படுகிறது. இந்த வாரத்தில், சரியான ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பதில் அதன் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நாடு ஒன்று கூடுகிறது. இந்த நிகழ்வு தனிநபர்கள் மற்றும் சமூகங்கள் தங்கள் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வில் கவனம் செலுத்த ஒரு நினைவூட்டலாக செயல்படுகிறது.
நமது ஆரோக்யா பாராமெடிக்கள் இன்ஸ்டிடியூட் மாணவிகள் , ஆசிரியர்களின் அறிவுறுத்தலின்படி ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளை தயார்செய்து அதனை காட்சிப்படுத்தினர். மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி திருமதி . டாக்டர். B . வித்யா பிரியதர்ஷினி அவர்கள் பார்வையிட்டு மாணவர்களின் படைப்பை பாராட்டினார் . மேலும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் பற்றி அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.