இலவச முதலுதவி மருத்துவ முகாம். 23.09.2023
இராமநாதபுரத்தில் , சூரியன் FM சார்பில் நடைபெற்ற பட்டிமன்ற நிகழ்ச்சியில் நமது ஆரோக்யா மருத்துவமனை சார்பாக இலவச முதலுதவி முகாம் நடைபெற்றது. பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
மருத்துவ முகாம் : (24.09.2023) வெளிப்பட்டினம் , இராமநாதபுரம்
நமது ஆரோக்யா மருத்துவமனை , சாய் கண் மருத்துவமனை மற்றும் இராமநாதபுரம் ஐ .மு .மு.க இணைந்து நடத்திய மாபெரும் சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் மற்றும் கால் பரிசோதனை முகாம்.
இராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதி மக்கள் பங்கேற்று பயன்பெற்றனர்.
மருத்துவ முகாம் : பாம்பன் (10.09.2023)
தேசிய ஊட்டச்சத்து வாரம் 2023:
தேசிய ஊட்டச்சத்து வாரம் என்பது இந்தியாவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 1 முதல் 7 வரை அனுசரிக்கப்படுகிறது. இந்த வாரத்தில், சரியான ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பதில் அதன் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நாடு ஒன்று கூடுகிறது. இந்த நிகழ்வு தனிநபர்கள் மற்றும் சமூகங்கள் தங்கள் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வில் கவனம் செலுத்த ஒரு நினைவூட்டலாக செயல்படுகிறது.
நமது ஆரோக்யா பாராமெடிக்கள் இன்ஸ்டிடியூட் மாணவிகள் , ஆசிரியர்களின் அறிவுறுத்தலின்படி ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளை தயார்செய்து அதனை காட்சிப்படுத்தினர். மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி திருமதி . டாக்டர். B . வித்யா பிரியதர்ஷினி அவர்கள் பார்வையிட்டு மாணவர்களின் படைப்பை பாராட்டினார் . மேலும் ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் பற்றி அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
77-வது சுதந்திர தின விழா. 2023
நமது ஆரோக்யா மருத்துவமனையில் 77வது சுதந்திர தின விழா , சுதந்திரத்தை போற்றும் வகையில் கொண்டாடப்பட்டது. நமது நாட்டின் தூண்களான இராணுவ வீரர்களை போற்றி பறைசாற்றும் விதமாக , இவ்விழாவுக்கு சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற கப்பல் படை அதிகாரி திரு . சக்திவேல் (petty Officer ) மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ sub . maj திரு . சந்திரன் அவர்களும் பங்கேற்று நமது மூவர்ண கொடியை ஏற்றினர் . பின் ஆரோக்யா பாராமெடிகள் இன்ஸ்டிடியூட் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் மேடை பேச்சு அரங்கேறியது. இறுதியாக தேசிய கீதம் பாடப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.
மருத்துவ முகாம் : இராமேஸ்வரம்
நமது ஆரோக்யா மருத்துவமனை சாய் கண் மருத்துவமனை , மற்றும் ஐ லேண்ட் பார்மசி இராமேஸ்வரம் இணைந்து நடத்திய மாபெரும் சர்க்கரை நோயாளிகளுக்கான மருத்துவ முகாம். இராமேஸ்வரம் முகைதீன் ஆண்டவர் தொழுகை பள்ளியில் நடைபெற்ற இம்மருத்துவ முகாமில் மக்கள் பங்கேற்று பயன் பெற்றனர்.
உலக தாய்ப்பால் வார விழா – 2023′
உலகத் தாய்ப்பாலூட்டல் வாரம் (World Breastfeeding Week, WBW) தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் ஆகத்து 1 முதல் ஆகத்து 7 வரை 120 இற்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
நமது ஆரோக்யா மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா 05.08.2023 அன்று கொண்டாடப்பட்டது. Inner wheels club of Ramnad மற்றும் Indian pediatric Association இனைந்து தாய்ப்பால் வார அனுசரிப்பின் பலன்களை மக்களுக்கு தெரியப்படுத்தினர். தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை மகிழ்விக்கும் விதமாக பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டது.
உலக புற்றுநோய் தின நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி -2023
உலகப் புற்றுநோய் நாள் (World Cancer Day) உலகளாவிய அளவில் ஆண்டுதோறும் february 4 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், நோய்த் தடுப்பு முறைகள், மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளைப் பரப்புவதும் இந்நாள் அனுசரிக்கப்படுவதன் முக்கிய நோக்கங்களாகும்.